வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 11:08 pm
india-enters-into-semi-finals-in-icc-cricket-worldcup

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில், வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா, பெரும் போராட்டத்திற்கு பின்னரே அந்த அணியை வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 314 ரன்கள் எடுத்தது. 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை துவங்கிய வங்கதேச வீரர்கள், துவக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். முதல் ஐந்து போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பயணித்த இந்தியா, கடந்த போட்டியில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது. 

இந்நிலையில் இன்றைய போட்டியிலும் அந்த நிலை ஏற்பட்டுவிடுமாே என்ற அச்சத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தினர் நம் வீரர்கள். இந்திய வீரர்களின் பந்துகளை, வங்கதேச வீரர்கள் சிதறடித்தனர். இறுதிவரை பரபரப்பு நீடித்தது. எனினும், எவ்வளவோ போராடியும் கடைசிவரை இலக்க எட்ட முடியாமல், 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இதன் மூலம், அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close