87 வயது ரசிகையுடன் விராட் கோலி... வைரலாகும் ஃபோட்டோ !

  கிரிதரன்   | Last Modified : 03 Jul, 2019 04:46 pm
wcc2019-virat-kohli-s-photo-with-the-87-year-old-indian-fan

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஸ்டன் மைதானத்தில், இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்களின் கவனத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஒரேயொரு ரசிகை தன்வசம் ஈர்த்தார்.

அவர் ஒன்றும் ஹாலிவுட், பாலிவுட் நடிகையோ, தொழிலதிபரின் மனைவியோ அல்ல... அவர்தான் 87 வயது ரசிகை சாருலதா படேல். இந்தியா பேட்டிங் செய்தபோதும், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பௌலிங் செய்தபோதும் கேலரியில் இருந்தபடி, சிறுகுழந்தை போல் தனது கன்னத்தில் நம் நாட்டின் மூவர்ண தேசிய கொடியை ஓவியமாக தீட்டிக் கொண்டு, ஊதுகுழலை இசைத்தப்படி, இந்திய அணியை தொடர்ந்து உற்சாகப்படுத்தி கொண்டே இருந்தார்.

இதனை களத்தில் இருந்தபடி அவ்வப்போது கவனித்து வந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி,  போட்டியில் வென்ற உடனேயே, இந்திய அணியின் 87 வயது ரசிகையை தேடி சென்று, அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இப்புகைப்படத்தை, கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் ஆஹா...ஓஹோ என பாராட்டி வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close