பேரிஸ்டாவ் 100... இங்கிலாந்து 200...

  கிரிதரன்   | Last Modified : 03 Jul, 2019 05:50 pm
wcc2019-england-opening-batsman-bairstow-scores-century-against-new-zealand

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியில், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான பேரிஸ்டாவ் சதம் அடித்து அசத்தினார். அவரது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் காரணமாக, 31 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்துள்ளது.

99 பந்துகளில் 106 ரன்கள் எடுத்த நிலையில், மாத் ஹென்றியின் பந்துவீச்சில் பேரிஸ்டாவ் கிளீன் போல்ட்டாகி அவுட்டானார். அவர் அடித்த சதத்தில் 15 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

இந்தியாவுக்கு எதிராக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் பேரிஸ்டாவ் 111 ரன்களை அடித்து, இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 33 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்களுடன் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close