ஆட்டோகிராஃப் தொப்பி.... ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரோஹித்!

  கிரிதரன்   | Last Modified : 03 Jul, 2019 06:50 pm
rohit-sharma-presents-autographed-hat-to-fan-who-got-hit-by-his-six-at-edgbaston

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, வங்கதேச அணிக்கு எதிராக பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற போட்டியில் சதமடித்து அசத்தினார்.

வங்கதேச வீரர்களின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரியும், சிக்ஸருமாக ரோஹித் அடித்து விளாசி கொண்டிருந்தார். அப்போது அவர் அடுத்த ஒரு சிக்ஸர், கேலரியில் உற்சாகமாக மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணி ரசிகை ஒருவரின் மீது எதி்ர்பாராதவிதமாக பட்டது.

இதையறிந்த ரோஹித், மேட்ச் முடிந்ததும் அந்த ரசிகையை நேரில் சந்தித்து, தமது ஆட்டோகிராப் உடன்கூடிய மஞ்சள் நிற தொப்பையை பரிசளித்தார். ரோஹித் அளித்த இன்ப அதிர்ச்சியில், அந்த இளம் ரசிகை இருப்புக் கொள்ளாமல் திக்குமுக்காடி போனார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close