சொதப்பிய மிடில் - ஆர்டர் பேட்ஸ்மேன்கள்... இங்கிலாந்தை 305 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து!

  கிரிதரன்   | Last Modified : 03 Jul, 2019 10:39 pm
wcc2019-england-set-306-runs-target-for-new-zealand

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற 306 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.

செஸ்டர்  லீ  ஸ் ரீட்டில் உள்ள ரீவர்சைட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோசன் ராய், பேரிஸ்டாவ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். 

இருவரும் அதிரடியாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 123 ரன்களை சேர்த்தனர். அத்துடன் பேரிஸ்டாவ் அடித்த அதிரடி சதத்தின் பயனாக, இங்கிலாந்து அணி 32 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்களை கடந்தது.

அப்போது மீதமிருந்த 18 ஓவர்களில் அந்த அணி குறைந்தபட்சம் இன்னும் 150 ரன்களை அடித்து, ஆட்டத்தின் முடிவில் 350 பிளஸ் ரன்களை எடுக்கும் என இங்கிலாந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அதன் பின்னர் நியூசிலாந்து அணியின் கை ஓங்கியது. மிடல் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததன் விளைவாக, 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக பேரிஸ்டாவ்  -106, ஜோசன் ராய் - 60, மோர்கன் - 42 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ட்ரன்ட் போல்ட், மேத் ஹென்றி, ஜிம்மி நெஸ்சம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற, இப்போட்டியில் ஜெயிக்க வேண்டியது இரு அணிகளுக்கும் மிக முக்கியம் என்பதால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அனல் பறக்கும் என ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close