வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்: கெயிலுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை போட்டி ரசிகர்களே...

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 03:46 pm
westindies-won-the-toss-and-chose-the-bat

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹெட்டிங்க்லி மைதானத்தில் நடைபெறவுள்ள 42-ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  நடப்பு உலகக்கோப்பையில் ஒரு வெற்றி கூட பெறாமல் இருக்கும் ஆப்கானிஸ்தான், கடைசி போட்டியிலாவது வெற்றி பெறுமா? என்று  அந்த நாட்டு ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு உலகக்கோப்பையில் இதுவே கடைசி போட்டி என்பதால், அவர் ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உலகக்கோப்பையில் 49 சிக்ஸர் அடித்து முதலிடத்தில் இருக்கும் கெயில், கடைசி ஆட்டத்தில் 50-ஆவது சிக்ஸரை அடிப்பாரா? என்று ஆவலுடன் உள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

இரு அணி வீரர்கள் விவரம்:

வெஸ்ட் இண்டீஸ்: கெயில், லீவிஸ், ஹோப், ஹெட்மேயர், பூரான், ஹோல்டர் (கேப்டன்), பிரத்வெயிட், ஆலென், காட்ரெல், தாமஸ், ரூச். 

ஆப்கானிஸ்தான்: ரஹ்மத் ஷா, குல்படின் நைப் (கேப்டன்), அஸ்கர் அஃப்கான், நபி, ஷின்வாரி, நஜிபுல்லா ஜட்ரான், இக்ராம் அலி கில், ரஷீத் கான், தவ்லத் ஜட்ரான், சயீத் ஷிர்ஷாத், முஜீபுர் ரஹ்மான்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close