தனது கடைசி உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய கிறிஸ் கெயில்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 03:40 pm
chris-gayle-who-disappointed-fans-in-his-last-world-cup-match

தனது கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக கெயில், லீவிஸ் களமிறங்கினார்கள். கெயிலுக்கு உலகக்கோப்பையில் இது கடைசி ஆட்டம் என்பதால் அவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், கிறிஸ் கெயில் 7 ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தவ்லத் ஜட்ரான் வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சித்து பந்து கீப்பரிடம் கேட்ச் ஆனது. 

18 பந்துகளை சந்தித்த கெயில்  1 பவுண்டரியுடன் 7 ரன்கள் மட்டுமே குவித்து அவுட் ஆனது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகக்கோப்பையில் கெயில் 50-ஆவது சிக்ஸ் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ஓவர்களின் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. லீவிஸ் 18, ஹோப் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close