ஆப்கானுக்கு 312 டார்கெட்: 12 சிக்ஸர்களை தெறி(பற)க்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 07:01 pm
afghanistan-need-312-runs-to-win

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு 312 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹெட்டிங்கிலி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது.

தனது கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். லிவீஸ் 58, ஹோப் 77, ஹெட்மேயர் 39 ரன்கள் எடுத்தனர். கடைசி 10 ஓவரில் பூரான் 58, ஹோல்ட்  45 ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 111 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 12 சிக்ஸர்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் தவ்லத் ஜட்ரான் 2, சையத்,  நபி, ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close