கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்குமா இந்தியா?: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை?

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 06:31 pm
india-vs-sri-lanka

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹெட்டிங்கிலி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறது இந்தியா - இலங்கை அணிகள். ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டாலும்,  இலங்கையை  வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பெற இந்தியா முயற்சிக்கும். இந்தியா முதலிடம் பிடிப்பதற்கு தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டியதும்  அவசியமாகும்.

இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டதால் வெற்றியுடன் உலகக்கோப்பை தொடரை முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும். அதேசமயத்தில், இங்கிலாந்துடன் தோல்வி, வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்ற இந்தியா, முக்கியமான போட்டியான அரையிறுதியில் வெற்றி பெறுவதற்கு, இந்த போட்டியை லேசாக எடுத்துக் கொள்ளாமல் வெற்றி பெற்று, உற்சாகத்துடன் அரையிறுதியை சந்திக்கும்.

கவனத்தை ஈர்க்கும் வீரர்கள்

இந்தியா

ரோகித் சர்மா

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா செம பார்மில் உள்ளார். அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். 4 சதங்களை அடித்துள்ளார். தொடர் நாயகன் லிஸ்டில் இடம்பெற்றுள்ள ரோகித், இலங்கை அணிக்கு எதிராக இரண்டு இரட்டை சதம் அடித்து தூள் கிளப்பியவர். அதனால் இன்றைய போட்டியில் ரோகித் இலங்கை வெச்சு செய்வார் என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

பும்ரா

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய வீரர்களில் ஒருவர் பும்ரா. இவரின் பந்துவீச்சை திறமையை  வங்கதேசத்திற்கு எதிரான கடந்த போட்டியே சாட்சியாகும். இதனால், இன்றைய போட்டியில் பும்ராவை எதிர்கொள்ள இலங்கை பேட்ஸ்மேன்கள் திட்டமிட்டு விளையாடுவார்கள்.

இலங்கை 

அவிஷ்கா பெர்னாண்டோ

வெஸ்ட்  இண்டீஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஒருநாள் தொடர் மற்றும் உலகக்கோப்பையில் முதல் சதத்தை பதிவு செய்து அசத்தியவர் இலங்கையின் இளம் வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ. வலது கை ஆட்டக்காரரான இவருக்கு 6-ஆவது போட்டியில் தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுவரை 3 போட்டியில் விளையாடி 183 ரன்கள் குவித்த அவிஷ்காவின் பேட்டிங் சராசரி 61 ஆகும். இதனால் இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இவர் ஜொலிப்பார் என்று தெரிகிறது.

மலிங்கா

37 வயதானலும், தனது பந்துவீச்சில் இன்னும் அதே வேகம், யார்க்கர் என எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் மலிங்கா, தான் விளையாடும் 4-ஆவது உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக பந்துவீசி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவரின் அனுபவத்தால், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்திவிட்டால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்பட்டுவிடும்.

யார் வெற்றி பெறுவார்கள்? 

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டாப் பார்மில் உள்ளனர். இதனால் அனுபவம் குறைந்த (மலிங்காவை தவிர) பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள இலங்கை அணி, இவர்களுக்கு எதிராக பந்துவீசுவது சவாலானது. இந்திய அணியில் உள்ள உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள, இலங்கை பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளதால், இந்த ஆட்டத்தில் வெற்றி இந்தியாவுக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்
.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close