இந்தியாவுக்கு டார்கெட் 265: பும்ரா பவுலிங் செம, மேத்யூஸ் சதம்

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 07:03 pm
india-need-265-runs-to-win

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 265 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹெட்டிங்கிலி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.  

12 ஓவர்களில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை மேத்யூஸ், திரிமன்னே ஜோடி  நிமிர வைத்தது. சிறப்பாக ஆடிய திரிமன்னே 53 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். 5-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 124 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து, அபாரமாக விளையாடி வந்த மேத்யூஸ் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை( இந்தியாவுக்கு எதிராக 3-ஆவது சதம்) பதிவு செய்தார். பின்னர் 113 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

40 ஓவர்களில் 200 ரன்கள் தொட்ட இலங்கை, கடைசி 10 ஓவரில், இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. தனஞ்செய டி சில்வா 29 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்தியா பவுலிங்: பும்ரா -3/37, புவனேஸ்வர் குமார் - 1/73, ஹர்திக் - 1/50, ஜடேஜா - 1/40, குல்தீப் - 1/50.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close