326 ரன்கள் டார்கெட்: ஆஸி., பவுலர்களுக்கு மெர்சல் காட்டிய தெ.ஆ., வீரர்கள்

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 09:57 pm
australia-need-326-runs-to-win

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், கடைசி லீக் ஆட்டமான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 326 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. 

முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட் ஜோடி 79 ரன்கள் எடுத்தது. மார்க் ராம் 34, டி காக் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடிய கேப்டன் டு பிளிசிஸ் 93 பந்தில் சதம் அடித்து, 100 ரன்களில் ஆட்டமிழந்தார். 

டு பிளிசிசுடன் ஜோடி செமையாக விளையாடி 95 ரன்கள் எடுத்திருந்த வாண்டர் டஸ்ஸன் ஆட்டத்தின் கடைசி பந்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், கம்மின்ஸ் பந்தில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க், லையன் தலா 2, ஜாசன், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close