டிஎன்பிஎல் கிரிக்கெட் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு: முன்னாள் கிரிக்கெட் வீரர் பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 09:32 pm
tnpl-cricket-tremendous-opportunity-to-advance-youth-cricket-former-indian-cricketer-hemant-badani

டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரிமியர் லீக்) கிரிக்கெட், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமந்த் பதானி தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நிறைவடைந்து, 4 -ஆவது ஆண்டாக இப்போட்டி வரும் ஜுலை 19 -ஆம் தேதி தொடங்குகிறது. 

இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமந்த் பதானி கூறியது: 

இந்த வருடம் 4 -ஆவது ஆண்டாக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் நிச்சயம் வரவேற்பை பெறும். இளைஞர்களுக்கு டி.என்.பி.எல் சிறந்த வாய்ப்பாக உள்ளது. 
இதில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதில் விளையாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அணி, ஐ.பி.எல்., இந்திய அணிக்கும் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன. அணியின் உரிமையாளர்கள் வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி வருகிறார்கள் என்று அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close