இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்பன் சௌரவ் கங்குலி, தமது 47 -ஆவது பிறந்த நாளை இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.
'கொல்கத்தாவின் இளவரசர்' என ரசிகர்களாலும், 'தாதா' (அண்ணன்) என சக வீரர்களாலும் செல்லமாக அழைப்படும் கங்குலிக்கு, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான வீரேந்திர சேவாக், ட்விட்டரில் குறும்புத்தனமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சேவாக் தமது வாழ்த்துச் செய்தியில், " 56 இஞ்ச் மார்பு கொண்ட கேப்டனே!... இனிய பிறந்த நாளில் உன்னை வாழ்த்துவதில் அகம் மகிழ்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
Happy Birthday to a 56” Captain , Dada @SGanguly99 !
56 inch chest,
8th day of the 7th month, 8*7 = 56 and a World Cup average of 56. #HappyBirthdayDada , May God Bless You ! pic.twitter.com/Dcgj9jrEUE
மேலும், கங்குலிக்கான பிறந்த நாள் வாழ்த்தில் தான் 56 இஞ்ச் என குறிப்பிட்டுள்ளதற்கான விளக்கத்தையும் சேவாக் அளித்துள்ளார். அதாவது ஜூலை மாதம் 8 -ஆம் தேதி, கங்குலியின் பிறந்த நாள் வருகிறது. எனவே, 8*7 = 56. இதேபோல் 1999, 2003 மற்றும் 2007 உலகக்கோப்பை போட்டிகளில் கங்குலி அடித்த சராசரி ரன் விகிதம் 56. எனவே தான் அவரை "56 இஞ்ச் மார்பு கொண்ட கேப்டன்" என குறிப்பிட்டுள்ளதாகவும் சேவக் தமது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அத்துடன், 2002 -இல், லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை வென்றதுடன், அத்தொடரையையும் கைப்பற்றியது. வெற்றி இலக்கை இந்தியா எட்டியதுடன், பெவிலியனில் அமர்ந்திருந்த கங்குலி, யாரும் எதிர்பாராதவிதமாக தமது ஜெர்சியை கழற்றி, சுழற்றியதை கிரிக்கெட் உலகம் என்றென்றும் மறக்காது. அந்த அரிய புகைப்படத்தையும் சேவக் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
newstm.in