கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி... இந்தியா Vs நியூசிலாந்து செமி ஃபைனல் மேட்ச் நடைபெறுவதில் சிக்கல்!

  கிரிதரன்   | Last Modified : 08 Jul, 2019 07:35 pm
india-vs-new-zealand-icc-world-cup-2019-semifinal-rain-expected-to-play-spoilsport-in-manchester

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமைந்துள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு உள்ளூர் நேரப்படி, நாளை காலை 10 மணியளவில் மழை பொழிய 50 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும், மேகக்கூட்டங்கள் விலகி, நீல வானம் தென்பட மதியம் 1 மணியாகும் எனவும், பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நாளை திட்டமிட்டப்படி நடக்குமா? மழையால் முற்றிலும் கைவிடப்படுமா? அல்லது ஆட்டம் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுமா? என பல்வேறு கேள்விகள், கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.

ஒருவேளை நாளைய போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால், நாளை மறுநாளே அப்போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றில், இவ்விரு அணிகளுக்கும் இடையே நாட்டிங்ஹாமில் நடைபெறவிருந்த போட்டி மழையால் முற்றிலும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close