வியப்பு...விராட் கோலி பௌலிங்கில் நியூசி., கேப்டன் அவுட்!

  கிரிதரன்   | Last Modified : 09 Jul, 2019 04:35 pm
virat-kohli-dismissed-kane-williamson-during-india-vs-new-zealand-u19-world-cup-semi-final

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று நம் எல்லோருக்கும் தெரியும். கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டி -20 போட்டிகளில் குறைந்த மேட்ச்களில் 20 ஆயிரம் ரன்களை கடந்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி அண்மையில் முறியடித்தார்.

தற்போது இந்திய அணியின் ரன் மெஷினாக திகழும்  கோலி, தேவைப்பட்டால் பௌலிங்கிலும் கலக்குவார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அவரது பெளலிங் திறமைக்கு ஆகச்சிறந்த சான்று இதோ:

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று மோதி வரும் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இதே அணிகள், 11 ஆண்டுகளுக்கு முன்பு 2008 -இல் நடைபெற்ற 19 வயதினருக்கு உட்பட்ட உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் மோதின.

அப்போதும் அவரவர் அணிக்கு கோலி மற்றும் வில்லியம்சன் கேப்டன்கள். 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டனுக்கான பொறுப்புடன் தொடர்ந்து  ஆட முயன்றார். ஆனால், விராட் கோலி தமது ஸ்மார்ட்டான பந்துவீச்சின் மூலம் ஸ்டெம்பிங் முறையில் வில்லியம்சன்னை அவுட் -ஆக்கி பெலிவியன் திரும்ப செய்தார்.

மான்செஸ்டரில் தற்போது நடைபெற்றுவரும் அரையிறுதி போட்டியில் கோலி பௌலிங் செய்வாரா எனத் தெரியாது. ஆனால், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்னை, இந்திய அணியின் பௌலர்கள் எவ்வளவு சீ்க்கிரம் பெவிலியன் திரும்பும்படி செய்கிறார்களோ, அந்த அளவுக்கு இந்தியாவுக்கு நல்லது.

https://www.youtube.com/watch?time_continue=1&v=aKWEMALsEmE

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close