இதுக்கு மேல இன்னைக்கு மேட்ச் நடக்குமா? நடக்காதா?

  கிரிதரன்   | Last Modified : 09 Jul, 2019 10:26 pm
world-cup-what-will-happen-if-it-continues-to-rain-at-the-india-new-zealand-semifinal-in-old-trafford

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரையிறுதி போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று நல்லபடியாக தான் தொடங்கியது. ஆனால், ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைய இருந்த நேரத்திலிருந்து அங்கு விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், கடந்த மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

இதனால் இன்று ஆட்டம் மீண்டும் நடைபெறுமா? இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லுமா? என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் கவலையை மறக்கடிக்கும் விதமாக நற்செய்தி வந்துள்ளது.

இங்கிலாந்து நேரப்படி, இன்றிரவு 11.30 மணி வரை தான் (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணி) மேட்ச் விளையாட விதிகளின்படி அனுமதி உண்டு. இதனடிப்படையில் மழை காரணமாக தற்போது தடைப்பட்டுள்ள ஆட்டம் மீண்டும் விளையாடப்பட்டால், குறைந்தபட்சம் இந்தியா 20 ஓவர் ஆடியாக வேண்டும்.

— Cricket World Cup (@cricketworldcup) July 9, 2019

அதற்கு முன், மைதானத்தின் ஈரப்பதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, போட்டியை மீண்டும் நடத்தலாமா? வேண்டாமா? என்று அம்பயர்கள் தான் முடிவு செய்வார்கள். அப்படி நடுவர்கள் அனுமதி அளிக்காதபட்சத்திலோ, போட்டியின் நடுவே மீண்டும் மழை குறுக்கிட்டாலோ இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டு, நாளைக்கு விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆட்டம் தொடரும்.  

அதாவது நியூசிலாந்து 46.2 ஓவரிலிருந்து மீதமுள்ள 3.4  ஓவர்களுக்கு பேட்டிங் செய்யும். அதில் அந்த அணி நிர்ணயிக்கும் இலக்கை எட்டினால், இந்தியா ஃபைனலுக்கு செல்லும்.

ஒருவேளை மழை காரணமாக நாளைக்கும் மேட்ச் கைவிடப்பட்டால், ரவுண்ட் -ராபின் சுற்றில் இந்தியா அதிக வெற்றிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் காரணத்தால், நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிடும். இதில் எது நடக்க போகிறதென்பது அந்த வருண பகவானுக்கு தான் வெளிச்சம்.

newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close