மான்செஸ்டரில் இன்னைக்கு வெயில் அடித்தால் என்னாகும்? மழை பெய்தால் என்னவாகும்?

  கிரிதரன்   | Last Modified : 10 Jul, 2019 04:48 pm
wcc2019-ind-vs-nz-semi-final-what-will-happened-today

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான  அரையிறுதி போட்டி மழையால் நேற்று பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில், உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய பொழுது மிகவும் த்ரில்லான நாளாக விடிந்துள்ளது.

மான்செஸ்டரில் இன்றைக்கு என்ன நிகழும்? வேர்ல்டுகப்பில் இந்தியா ஃபைனலுக்கு செல்வது இன்றாவது உறுதியாகுமா? என்ற தவிப்புடன் ரசிகர்கள் இப்போட்டியின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் தவிப்பை தணிக்கும் விதத்தில் நல்ல தகவல்களும் லண்டனிலிருந்து வந்துக் கொண்டிருக்கின்றன.

அதாவது, மான்செஸ்டரில் இன்று மழை ஓய்ந்து, இதமாக வெயில் அடித்தால், இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி, நேற்று விட்ட இடத்திலிருந்து மீ்ண்டும் தொடரும்.  அதாவது, 46.2 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்து, முதல் பாதியில் மீதம் விளையாட வேண்டிய 3.4 ஓவர்களுக்கு பேட்டிங் செய்யும். அப்போது அந்த அணியை 235 ரன்களுக்குள் இந்தியா சுருட்டி ஆக வேண்டும்.

அதைத்தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டம் 50 ஓவர்களுக்கு முழுமையாக நடைபெற்றால் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறுவது  அனேகமாக உறுதி. இதற்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 10, 15 ஓவர்களுக்கு விக்கெட்டுகளை இழக்காமல் நிலைத்து ஆட வேண்டியது மிக மிக அவசியம். காரணம், நியூசிலாந்தின் ஓபனிங் பௌலர்களான போல்டும், ஹென்றியும் தொடக்க ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர்கள். 

இல்லை... மான்செஸ்டரில் இன்றும் மழை பெய்து ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டாலும், ரவுண்ட் -ராபின் சுற்றில் அதிக ஆட்டங்களில் வென்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி என்ற முறையில் இந்தியா நேரடியாக ஃபைனலுக்கு செல்லும்.

இந்த இரண்டு வாய்ப்புகளும் இல்லாமல், மழை காரணமாக போட்டி தாமதாக தொடங்கப்பட்டலோ, ஆட்டத்தின் நடுவே மழை வந்து,  அதனால் போட்டி சில மணி நேரம் தடைப்பட்டலோ டக்வொர்த் லூயிஸ் முறையில் போட்டி நடத்தப்படும்.  அப்படியொரு சூழல் ஏற்பட்டால், இந்தியா குறைந்தபட்சம்  20 ஓவர்கள் விளையாடி ஆக வேண்டும் என்பது  மட்டுமின்றி, 20 ஓவர்களில் 148 ரன்கள், அதாவது 120 பந்துகளில் 148 ரன்களை எடுத்தால்தான் வெற்றி பெற முடியும். இதே கணக்கின்படி 25 ஓவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டால் 172 ரன்களும், ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டால் 209 ரன்களையும் இந்தியா அடித்தாக வேண்டும்.

என்னதான் நவீன இயந்திரங்களை வைத்து மைதானத்தின்  ஈரப்பத்தை உலர்த்தினாலும், மான்செஸ்டரில் நேற்று பெய்த மழைக்கு, ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்றும் ஈரம் இருக்கதான் செய்யும். அதனால், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி ரன்களை எடுப்பது மிகவும் கடினம். அத்துடன் இந்த மைதானத்தில், நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் (சேசிங்) செய்துள்ள அணிகள் வெற்றி பெற்றதே இல்லை.

இதுபோன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒன்று இன்று ஆட்டம் முழுமையாக நடைபெற வேண்டும் அல்லது முழுவதுமாக கைவிடப்பட வேண்டும். அப்போதுதான் போட்டி முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமையும். இவற்றுக்கு மாறாக, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் நடைபெற்றால், அது நியூசிலாந்துக்கு தான் சாதகமாக அமையும். பார்ப்போம்...இன்று என்ன நடக்கப் போகிறதென்று....

 

வி.ராமசுந்தரம்,

தொழிலதிபர், கிரிக்கெட் விமர்சகர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close