240 ரன்கள் டார்கெட்... அசால்ட்டா அடிக்குமா இந்தியா?!

  கிரிதரன்   | Last Modified : 10 Jul, 2019 07:38 pm
wcc2019-semi-final-nz-fix-240-runs-target

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற 240 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

மாஸ்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு  239 ரன்களை எடுத்துள்ளது.

அதிகபட்சமாக ராஸ் டெய்லர் - 74, கேப்டன் வில்லியம்சன் -67 ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 240 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளனர்.

மழையின் காரணமாக, இந்த அரையிறுதி போட்டி நேற்றும், இன்றும் என, இரண்டு நாட்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close