ஓ மை காட்... ரோஹித், கோலி, ராகுல் அடுத்தடுத்து அவுட்...

  கிரிதரன்   | Last Modified : 10 Jul, 2019 04:11 pm
wcc2019-semi-final-india-loses-early-wickets-and-struggled

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதலாவது அரையிறுதி போட்டியில் 240 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் தலா ஒரு ரன்னே எடுத்த நிலையில், மேத் ஹென்றியின் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அணியின் கேப்டன் விராட் கோலியும் ஒரு ரன்னில் எல்பிடபள்யூ முறையில் அவுட் -ஆகி பெவிலியன் திரும்ப, இந்திய அணி  6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து, 10 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினேஷ் கார்த்திக்கும், ரிஷப் பண்டும் களத்தில் உள்ளனர். மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல், இந்திய அணி வீரர்கள் நிலைத்து  ஆடினால் மட்டுமே முக்கியமான இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற இயலும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close