தினேஷ் கார்த்திக் விக்கெட்டையும் பறிகொடுத்த இந்தியா

  கிரிதரன்   | Last Modified : 10 Jul, 2019 05:05 pm
wcc2019-india-loses-forth-wicket-also-in-semi-final-match-against-newzealand

உலகக்கோப்பை கிரிக்கெட்டின்  அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வந்தது. இந்த நிலையில், 4 -ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்டும், தினேஷ் கார்த்திக்கும் கொஞ்சம் நேரம் நிலைத்து ஆடினர்.

அப்பாடா... பரவாயில்லை...இந்தியா சரிவிலிருந்து மீண்டு விடும் என்று ரசிகர்கள் கொஞ்சம் ஆஸ்வாசம் அடைந்த நிலையில், அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி இடியாக இறங்கியது. 6 ரன்கள்  எடுத்திருந்த தினேஷ் கார்த்திக்கை தமது அருமையான கேட்சின் மூலம் வெளியேற்றினார் நியூசிலாந்து வீரர் நீஸம்.

இதையடுத்து, 12 ஓவர்களின் முடிவில்  4 விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ரன்களே எடுத்து இந்தியா தொடர்ந்து தடுமாறி வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close