108/6...களத்தில் தோனி -ஜடேஜா ஜோடி... சாதிக்குமா?

  கிரிதரன்   | Last Modified : 10 Jul, 2019 06:11 pm
wcc2019-semi-final-india-s-struggle-continously

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற 240 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், 25 ரன்களை எடுப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமாக விளையாடி வந்தது.

இந்த நிலையில்,  ரிஷப் பண்ட் மற்றும்  ஹர்த்திக் பாண்டியா ஆகிய இளம் ஜோடிகளின் பொறுப்பான ஆட்டம்,  அணியை சரிவிலிருந்து சற்று மீட்டது. ஆனால் இருவரும் தலா 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேற, தற்போது 33 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்துள்ளது.

இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக, தோனி -ஜடேஜா ஜோடி களத்தில் உள்ளது. இந்த ஜோடி இணைந்து, 100 ரன்களுக்கு மேல் சேர்த்து, ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே  இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற இயலும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close