இந்திய அணியை எச்சரித்திருந்த Newstm -ன் கிரிக்கெட் விமர்சகர் ராமசுந்தரம் !

  கிரிதரன்   | Last Modified : 10 Jul, 2019 07:36 pm
wcc2019-semi-final-newstm-prediction-comes-to-true

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் முதல் பத்து ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் விளையாட வேண்டும் என்று, நமது Newstm-ன் கிரிக்கெட் விமர்சகர், இன்றைய தனது கட்டுரையில் எச்சரித்திருந்தார்.

இவ்வாறு அவர் எச்சரித்ததற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று... நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர், ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் (சேசிங்) செய்த அணிகள் ஜெயித்ததில்லை...

மற்றொரு காரணம்...நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது இந்திய அணியின் ஓப்பனிங் பெளலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா வீசிய பந்துகள் வழக்கத்தைவிட அதிகமாக ஸ்விங் ஆகின. அப்படியானால், நியூசிலாந்து அணியின்  ஓப்பனிங் பெளலர்களான போல்டு மற்றும் மேத் ஹென்றியின் பந்துகள் நிச்சயம் மாயாஜாலம் காட்டும். 

அவர்களின் பந்துகளை இந்தியாவின் ஓப்பனிங் மற்றும் மிடில் -ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என, நமது கிரிக்கெட் விமர்சகர் வி.ராமசுந்தரம் எச்சரித்திருந்தார். அவர் எச்சரித்தப்படியே, முதல்  10 ஓவர்களில் இந்திய அணி 24 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

https://www.newstm.in/news/sports/cricket/66646-wcc2019-ind-vs-nz-semi-final-what-will-happened-today.html

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close