கோலியை பழி தீர்த்த வில்லியம்சன்!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 07:54 pm
virat-kholi-vs-williamson

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் தனக்கு இருந்த, 11 ஆண்டு பகைக்கு பழிதீர்த்துக் கொண்டார் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன். 

இந்திய கேப்டன் விராட் கோலி, இந்திய ஜூனியர் அணியின் கேப்டனாகவும் இருந்தார். 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில், இந்திய ஜூனியர் அணியை வழி நடத்தி கேப்டனாக இருந்த கோலி, மிகச் சிறப்பாக விளையாடி, இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். 

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இதே நியூசிலாந்தை இந்திய அணி எதிர்கொண்டது. அப்போதும், அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், தற்போதைய நியூசிலாந்து அணி கேப்டனான வில்லியம்சன் தான். 

அந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்று, கோப்பையையும் தட்டிச் சென்றது. இது குறித்து கோலியே மிகவும் சிலாகிப்புடன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், கோலி மீது தான் கொண்டிருந்த 11 ஆண்டுகால பகைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் வில்லியம்சன். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close