இந்திய அணியின் தோல்விக்கு ‛சரக்கு பார்ட்டி’ தான் காரணமா? 

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2019 09:11 pm
ravi-sashtri-and-indian-cricket-players-with-wine-bottle

இங்கிலாந்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம், பைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. 

இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்த்திரி நேற்று இரவு ‛சரக்கு’ பார்ட்டி வைத்ததாகவும்,  அதன் காரணமாகவே கேர் ஆன வீரர்கள், சரியாக விளையாடாமல் இந்திய அணி தோல்வி அடைந்ததாகவும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி வீரர்களுடனான குரூப் போட்டோவில், ரவிசாஸ்த்திரியின் நாற்காலிக்கு அடியில், பீர், வொயின் பாட்டில்கள் இருப்பது போன்ற படம் வேகமாக ஷேர் ஆகி வருகிறது. 

இதற்கிடையே, இந்த புகைப்படம், ஜூலை 6ம் தேதி எடுக்கப்பட்டது என்றும். ஒரிஜினல் போட்டோவை போட்டோ ஷாப் செய்து விஷமிகள் வதந்தி பரப்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரிஜினல் போட்டாேவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர, அதை போட்டோ ஷாப் செய்த விஷமிகள், ரவிசாஸ்த்திரிக்கு எதிராக இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர். 

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close