மிரட்டிய இங்கிலாந்து பவுலர்கள்: 224 ரன்கள் டார்கெட்

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2019 07:10 pm
england-need-224-runs-to-win

உலககக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 224 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பின்ச் 0, வார்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களுக்கு 27 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை ஸ்மித், கேரி கரை சேர்த்தனர். 

பின்னர் ரஷித்தின் ஒரே ஓவரில் கேரி 46 ரன்களிலும், ஸ்டொயினிஸ் டக்அவுட் ஆனது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித், கோரி 103 ரன்கள் சேர்த்தனர். இதன் பின் வந்த மேக்ஸ்வெல் 22, கம்மின்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதனிடையே ஸ்மித் அரைசதம் அடித்து நிலையாக ஆடினார்.

8-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஸ்மித் 51 ரன்கள் சேர்க்க, 85 ரன்னில் ஸ்மித், ஸ்டார்க் 29 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் ஆஸ்திரேலியா 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இங்கிலாந்து பந்துவீச்சு: வோக்ஸ் 3/20, ஆர்ச்சர் 2/32, ரஷித் 3/54, வுட் 1/45.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close