இந்திய அணி தோல்வி: ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்கும் பிசிசிஐ

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 05:39 pm
indian-team-lose-bcci-asks-for-an-explanation-ravishastri

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு  எதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் பிசிசிஐ விளக்கம் கேட்டுள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்லும் என்ற ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை, நியூசிலாந்து அணி தகர்த்தெறிந்தது. அந்த அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 240 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

இந்த நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் பிசிசிஐ விளக்கம் கேட்டுள்ளது.
 எதனடிப்படையில் 3 விக்கெட் கீப்பர்களை அணியில் தேர்வு செய்தீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ள பிசிசிஐ, அம்பாதி ராயுடுவை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது குறித்தும், தோனியை 7-ஆவது வீரராக களம் இறக்கியது குறித்தும் ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளது.

தோனியை 7-ஆவது வீரராக களமிறக்கியது குறித்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது பிசிசிஐ-யும் கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த விஷயம் பூதாகரமாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close