பும்ரா ஸ்டைலில் பௌலிங் போடும் பாட்டி... வைரலாகி வரும் வீடியோ...

  கிரிதரன்   | Last Modified : 14 Jul, 2019 05:52 pm
old-lady-emulating-jasprit-bumrah-s-iconic-bowling-run-up

ஜஸ்பிரிட்  பும்ரா... இந்தியாவில் மட்டுமல்ல... உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இன்று உற்சாகமாய் உச்சரிக்கும் பெயர்... 

பொதுவாக, கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என பேட்ஸ்மேன்களுக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகம் இருப்பார்கள். கபில்தேவ், மெக்ராத் என பௌலர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பது மிக அரிது. அந்த அரிதான பட்டியலில் பும்ராவும் தற்போது சேர்ந்துள்ளார்.

அநாயசமாக "யார்க்கர்" பந்தை போட்டு எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் என்பது மட்டுமல்ல...  வேகப்பந்தை வீசினாலும், குறைவான தொலைவிலிருந்து துள்ளித் துள்ளி ஓடிவந்து 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும்  தமது வித்தியாசமான ஸ்டைலின் மூலம், பல லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார் பும்ரா.

— Jasprit Bumrah (@Jaspritbumrah93) July 13, 2019

இவரது பௌலிங் ஸ்டைலால் கவரப்பட்ட மூதாட்டி ஒருவர், தமது வீட்டின் வரவேற்பறையில் பும்ரா ஸ்டைலில் ஓடி வந்து பந்து வீசுவது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவை பார்த்து பரவசமடைந்த பும்ரா, "இந்த வீடியோ காட்சி இன்றைய தினத்தை என்னுடையதாக்கி உள்ளது" என உற்சாகமாய் பதிலளித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளாரான பும்ரா, இதுவரை தான் பங்கேற்ற 58 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 103 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அத்துடன், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை  வீழ்த்தியுள்ள (18 விக்கெட்டுகள்) இந்திய பௌலர்கள் என்ற பெருமையுடன், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close