கிரிக்கெட் வீரர்களிடமும் தொற்றிக் கொண்ட பாட்டில் சேலஞ்ச்! வைரலாகும் வீடியோ...

  கிரிதரன்   | Last Modified : 18 Jul, 2019 10:14 pm
shikhar-dhawan-s-bottle-cap-challenge-leaves-challenger-yuvraj-singh-shellshocked

"பாட்டில் சேலஞ்ச்" என்ற பெயரில் மூடியை கையால் தொடாமலேயே திறக்கும் வீடியோக்களை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஏற்கனவே பாலிவுட் ஸ்டார்கள் பலரும் இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

அவர்களின் வரிசையில் சமீபத்தில் இணைந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், பாட்டில் சேலஞ்ச்சில் பங்கேற்க ஷிகர் தவானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். யுவராஜ் சிங் விடுத்த சவாலை ஏற்ற ஷிகர் தவான் அதில் இன்று வெற்றியும் பெற்றுள்ளார்.

மஞ்சள் நிற டென்னிஸ் பந்தை தமது பேட்டினால் அடித்து  எதிரே வைக்கப்பட்டிருந்த பாட்டிலின் மூடியை திறக்கும் வீடியோ காட்சியை, தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தவான், தமக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த யுவராஜ் சிங்கிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

— Shikhar Dhawan (@SDhawan25) July 18, 2019

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close