'கிரிக்கெட் ஜாம்பவான்' சச்சினை கவுரவித்த ஐசிசி!

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 11:16 am
icc-hall-of-fame-sachin-tendulkar

'கிரிக்கெட் ஜாம்பவான்' சச்சின் டெண்டுல்கருக்கு  'ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கி கௌரவித்துள்ளது ஐசிசி. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கள் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்; சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 

இதையடுத்து, சாதனை கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியிற் கிரிக்கெட் கவுன்சில்  'ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருதினை வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. இவருடன்  தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோரும் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதினை பெற்றுள்ளனர். 

முன்னதாக, 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதினை இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பிஷன் சிங் பேடி, அனில் கும்ப்ளே, ராகுல் ட்ராவிட் ஆகிய ஐவர் பெற்றுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close