டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு: அமிர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2019 04:42 pm
mohammad-amir-announces-retirement-from-test

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் டெஸ்ட் கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இடதுகை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், 50 மற்றும் டி20 ஓவர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில்  இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 

மேலும், இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்காகவும், 50 மற்றும் டி20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காகவும் ஓய்வை முடிவை அறிவித்துள்ளதாகவும் அமிர் கூறியுள்ளார்.

27 வயதே ஆகும் அமிர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக காலே நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அமிரின் ஓய்வு முடிவு, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close