வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 168 ரன்கள் டார்கெட்

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2019 09:54 pm
westindies-need-168-runs-to-win-against-india

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா டி20 போட்டியில் 17-ஆவது அரைசதம் அடித்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி 28, தவான் 23 ரன்கள் அடித்தனர். 
முதலில் நன்றாக போய்க்கொண்டிருந்த ஆட்டம், பிறகு சொதப்ப, கடைசி ஓவரில் க்ருனால் பாண்ட்யா, ஜடேஜா அடித்த சிக்ஸரால் 20 ரன்கள் கிடைத்தது. இதனால் அணி டீசண்ட்டான ஸ்கோரை எட்டியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் தாமஸ், காட்ரெல் தலா 2, கீமோ பால் ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close