கடைசி டி20 போட்டி: இந்தியாவுக்கு ஹாட்ரிக், வெஸ்ட் இண்டீஸ்க்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 04:30 pm
india-vs-westindies-last-t20-today

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி கயானாவில் இன்று நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலம் ஆக்குவதற்காக முதல் மற்றும் இரண்டாவது போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-ஆவது ஆட்டத்தில் 22 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில், கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில், இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா? அல்லது டி20 போட்டி எப்போதுமே சிறப்பாக ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ், ஆறுதல் வெற்றி பெறுமா? என்று பார்க்கலாம்.
இந்திய அணி தொடரை வென்றதால், இரண்டு போட்டிகளில் விளையாட வீரர்களுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close