டெஸ்டில் இருந்து ஸ்டெயின் ஓய்வு: ரசிகர்கள் ‘ஷாக்’

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 10:05 pm
steyn-retires-from-test-fans-shock

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

36 வயதான டேல் ஸ்டெயின், கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டெயின், ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் ரேங்கில் அதிக நாட்கள் முதல் இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி காயம் காரணமாக விளையாட முடியாமல் போகும் சூழலை எதிர்கொண்டு வந்த ஸ்டெயினின் இந்த ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close