சதத்தால் ஸ்மித் முதலிடம்; டக் அவுட்டால் கோலி 2-ஆம் இடம்

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2019 04:20 pm
centuary-smith-tops-the-list-kohli-2nd-by-duck-out

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்சில் கோலி முதல் பந்திலேயே டக் ஆவுட் ஆனதால் அவரின் முதலிடம் பறிபோனது. ஆஷஸ் தொடரில் சதம் அடித்ததால் 904 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தை பிடித்து ஸ்மித் சாதனை படைத்துள்ளார். கோலி 903 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

 நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், 825 புள்ளிகளுடன் புஜாரா 4 மற்றும் 725 புள்ளிகளுடன் ரஹானே 7-ஆவது இடத்திலும் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close