டி20 கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2019 04:52 pm
mithali-raj-announced-retirement-t20-cricket-match

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்து வந்த மிதாலி ராஜ், சமீபகாலமாக டி20 அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு தயாராகவுள்ளதாக கூறி, சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

89 டி20 போட்டிகளில் விளையாடி 2364 ரன்கள் சேர்த்துள்ள மிதாலி ராஜ், 32 டி20 போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும்,  டி20 போட்டியில் 2000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close