இந்தியா மீது பழி போட்ட பாகிஸ்தான்: இலங்கை அமைச்சர் மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2019 05:41 pm
pakistan-blamed-india-sri-lanka-minister-disclaimer

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கு இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி, செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணியில் இருந்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காடி 10 வீரர்கள் விலகியுள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் தொழில்நுட்பம் மற்று அறிவியல் அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி தெரிவித்திருந்தார். 

இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடினால், ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று இந்தியா மிரட்டியதாகவும், அதன் காரணமாகவே, வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்று அந்த அமைச்சர் கூறினார்.

இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ ட்விட்டரில்,  ’இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததற்கு இந்தியா தான் காரணம் என்று சொல்வதில் உண்மையில்லை, 2009 நடைபெற்ற சம்பவங்களால் தான் வீரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். பாகிஸ்தான் செல்ல எந்த வீரர்கள் விரும்பினார்களோ, அவர்களை தேர்வு செய்துள்ளோம். எங்களிடம் முழு பலம் உள்ள அணி உள்ளது, பாகிஸ்தானில் பாகிஸ்தானை வீழ்த்துவோம் என்று நம்புகிறோம்' என்று விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, லாகூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இலங்கை வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close