இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டி இன்று நடைபெறுமா?: காரணம் உள்ளே

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 04:37 pm
india-vs-southafrica-rain

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையே பெங்களூருவில் இன்று நடைபெறவுள்ள 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி மழையால் பாதிக்க வாய்ப்புள்ளது.

மூன்று டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதலில் டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில், தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மொகாலியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நிலையில், பெங்களூருவில் இன்று நாள் முழுவதும் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்றைய போட்டி மழையால் பாதிக்க வாய்ப்புள்ளது. ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டியும் நடைபெறலாம். தர்மசாலாவில் பெய்த மழையால் முதல் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில், ஒருபந்து கூட வீசாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், இந்த தொடரை இந்தியா வெல்லும். ஏனென்றால்  1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close