3வது டி -20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 10:20 pm
indvssa-sa-won-by-9-wkts

இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.  தென்னாப்பிரிக்காவுக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக ஷிகர் தவான் 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

இதன் பின்னர் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்துகளை எதிர்கொண்டது. தொடக்க ஆட்டக்காரரான ஹென்ரிக்ஸ் 28 ரன்களுடனும் ஆட்டமிழந்தார். பின்னர் டி காக் மற்றும் பவுமா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினர். இதில் டி காக் 52 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார் . இறுதியாக 16.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 140 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உள்ளது.

முன்னதாக முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close