தோனி வெளியிட்ட வேடிக்கையான வீடியோ: செம வைரல்..! 

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2019 10:36 pm
ms-dhoni-shares-funny-instagram-video

முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகி, அதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தனது குழந்தை பருவ நினைவுகளை நினைவுப்படுத்தும் ஒரு வேடிக்கையான வீடியோவை தோனி பகிர்ந்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது. இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில், தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை நினைவுப்படுத்தும் விதமாக பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும், கிரிக்கெட் ரசிகர்கள், உலகக்கோப்பையை வென்ற தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அந்த கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த தோனி, தனது இன்ஸ்டாகிராமில் வேடிக்கையான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவிட்டு, தனது குழந்தை பருவ நினைவுகளை தோனி பகிர்ந்துகொண்டார்.

அதில், 'மோசமான வெளிச்சத்திற்கு மன்னிக்கவும். ஆனால் இது வேடிக்கையான சோதனை பந்து, நடுவர்களின் முடிவு கடைசி முடிவு. அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் நம்மில் அனைவரும் இதைக் கண்டிருக்கிறோம். என்ஜாய்’ என்று தோனி பதிவிட்டுள்ளார்.

<

>

தோனி வெளியிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close