சினிமாவில் நடிக்கும் தோனி?...அப்போ கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்கிறாரா?

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2019 09:26 pm
dhoni-act-bollywood-movie

தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி, இரண்டு மாதங்களாக ஓய்வில் இருக்கும் தோனி, பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. இதனால், தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது வதந்தி என்றும் ஒருபக்கம் கூறப்படுகிறது. இதனிடையே, இரண்டு மாதங்கள் இந்திய ராணுவத்தில் பயிற்சி வேலையில் தோனி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  

இந்த நிலையில், பாலிவுட் திரைப்படத்தில் தோனி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், இம்ரான் ஹாஸ்மி, சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தோனிக்கு குணச்சித்திர வேடமாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close