2020 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்: தேதி மற்றும் இடம் அறிவிப்பு 

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2019 07:37 pm
players-auction-for-the-2020-ipl-series-date-and-venue-announcement

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி மற்றும் இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், 13ஆவது சீசன் ஐபிஎல் போட்டியில் பங்கு பெறும் வீரர்களின் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி  கொல்கத்தாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. கொல்கத்தாவில், ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close