பதவி விலகினார் கபில் தேவ்: பிசிசிஐயில் பரபரப்பு

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2019 05:49 pm
kapil-dev-resigns-as-cac-membership

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், கிரிக்கெட் அணிக்கான ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மூன்று உறுப்பினர்கள் கொண்ட அந்த குழுவினருக்கு எதிராக சிலர் புகார் எழுப்பியதை அடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம், பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, ஏற்கனவே அந்த குழு உறுப்பினர் ஒருவர் பதவி விலகிய நிலையில், கபில் தேவும் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

பலர் புகார் எழுப்பினாலும், அனைவரின் புகாரையும் சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டால் யாருமே எந்த பதவியும் வகிக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள தேவ், தன்னிடம் விளக்கம் கேட்கப்பட்டதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close