மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல் 

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2019 02:25 pm
mayank-agarwal-stunning-hit-a-double-century

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது, நடைபெற்று வரும் இரண்டாம் நாள் ஆட்டத்தில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார். 358 பந்துகளில் 22 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை அகர்வால் பதிவு செய்தார்.

தற்போதைய நிலவரப்படி, இந்திய 4 விக்கெட்டுகளை இழந்து 432 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. ஜடேஜா 0 , அகர்வால் 211 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close