முதல் டெஸ்ட்: தென்னப்பிரிக்க வீரர் எல்கர் சதம் 

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 02:08 pm
first-test-south-african-player-elgar-century

இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னப்பிரிக்க வீரர் எல்கர் சதம் அடித்து அசத்தினார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று இந்த போட்டியில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.  3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கி ஆடி வரும்  தென்னாப்பிரிக்க அணியில். எல்கர் தனது 12 டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். கேப்டன் டூ பிளிசஸ் அரைசதம் அடித்து 55 ரன்களுக்கு அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  

தற்போதய நிலவரப்படி, தென்னாப்பிரிக்கா 76 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. எல்கர் 116, டி காக் 39 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணியை விட 258 ரன்கள் தென்னாப்பிரிக்கா பின் தங்கியுள்ளது. இந்தியா 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close