குறைந்த போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை 

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2019 10:08 am
ashwin-s-record-of-taking-350-wickets-in-fewer-matches

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட் வீழ்த்தி முரளிதரனின் சாதனையையும் அஸ்வின் சமன் செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் முத்தையா முரளிதரன் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 350 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் டி புரூன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். 

மேலும், அதிவேகமாக 350 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர் கும்ப்ளேவின் சாதனையையும் அஸ்வின் முறியடித்துள்ளார். கும்ப்ளே 77ஆவது டெஸ்ட் போட்டியில் 350ஆவது விக்கெட்டை வீழ்த்தியிருந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close