முதல் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2019 02:46 pm
india-won-by-203-runs-in-the-first-test

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்களில் டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்கா 431 ரன்களில் ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்சில் 323 ர்னகளில் டிக்ளேர் செய்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

இந்த நிலையில், 395 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன், கடைசி நாளில், களமிறங்கி ஆடிய தென்னாப்பிரிக்கா ஷமி, ஜடேஜாவின் அபார பந்துவீச்சால் 63.1 ஓவர்களில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 9ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேட் பீட், முத்துசாமியும் 91 ரன்கள் சேர்த்தனர்.  பீட் 56, முத்துசாமி 49* ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ஷமி 5, ஜடேஜா 4, அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து, இரண்டு இன்னிங்சிலும் சதமடித்து அசத்திய ரோகித் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close