2ஆவது டெஸ்ட்: தேநீர் இடைவேளை; கங்குலியை முந்தி கோலி அசத்தல்

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2019 02:41 pm
2nd-test-tea-break-the-kohli-is-overtaking-ganguly

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

புனேயில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். ரோகித் 14 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  

இதையடுத்து, புஜாரா களமிறங்கினார். தொடர்ந்து நன்றாக ஆடி அகர்வால் அரைசதம் அடித்தார். இவரை தொடர்ந்து புஜாராவும் அரைசதம் அடித்து 58 ரன்களில்  ரபாடா பந்துவீச்சிலே இவரும் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து, தற்போது கோலி களமிறங்கியுள்ளார். 
தேநீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. 86 ரன்களுடன் அகர்வால் களத்தில் உள்ளார். கோலி(0*) தனது ரன்வேட்டை இன்னும் தொடங்கவில்லை.

இந்த போட்டியின் மூலம் 50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். 49 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்திய கங்குலியை கோலி முந்தினார். 60 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து இந்திய அணியை வழி நடத்திய தோனி முதலிடத்தில் உள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close