இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா திணறல்

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2019 02:27 pm
south-africa-is-unable-to-cope-with-india-s-bowling

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் தென்னாப்பிரிக்கா திணறி வருகிறது.

புனேயில் நடைபெற்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கயிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்தது. தென்னாப்பிரிக்காவை விட 326 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளதால் ஃபாலோ-ஆன் கொடுத்தது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய முதலாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்க்ராம் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். 

இதையடுத்து, அஸ்வின், ஜடேஜா ஷமி, உமேஷ் யாதவ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், தேநீர் இடைவேளை வரை தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்து திணறி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close