இந்திய கிரிக்கெட் அணியில் இயல்பு நிலை திரும்பும்: சவுரவ் கங்குலி  

  Newstm Desk   | Last Modified : 14 Oct, 2019 09:07 pm
indian-cricket-team-returns-to-the-normal-position-sourav-ganguly

இன்னும் சில மாதங்களில் அனைத்தும் சீரடைந்து இந்திய கிரிக்கெட் அணியில் இயல்பு நிலை திரும்பும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என்று முன்னாள் பிசிசிஐ நிர்வகி ராஜூவ் சுக்லா இன்று அறிவித்தார். கங்குலி தேர்வானது தொடர்பான முறையான அறிவிபு அக்டோபர் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்றும அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பின் மும்பையில் சவுரவ் கங்குலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இன்னும் சில மாதங்களில் அனைத்தும் சீரடைந்து இந்திய கிரிக்கெட்டில் இயல்புநிலை திரும்பும். அணியுடன் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் இடத்தில் இருப்பது திருப்தி அளிக்கிறது’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close