பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பு: சர்ஃபராஸ் அகமது நீக்கம் 

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2019 04:13 pm
pakistan-team-captain-responsible-sarfaraz-ahmed-dismissed

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இது சர்சையான நிலையில்,  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக அஸார் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டி20, ஒருநாள் தொடரை பாகிஸ்தான் இழந்தது குறிப்பிடத்தக்கது. புதுமுக வீரர்கள் இடம்பெற்ற இலங்கை அணியிடம், அதுவும் உள் நாட்டிலேயே தோல்லி அடைந்தது, அந்நாட்டு ரசிகர்களை மிகவும் கொந்தளிக்க செய்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close